கட்சி தொண்டரை ஓங்கி அடித்த அமைச்சர் நேரு : பதறிய உதயநிதி.. தொடரும் திமுக அவலம்
பொது நிகழ்ச்சி ஒன்றில் திமுக கட்சித்தொண்டரை சட்டையை பிடித்து அமைச்சர் நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் தொடரும் அவலம்
கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் செய்யும் சில செயல்களை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டணம் வைத்து வருகின்றது
கல் வீசிய அமைச்சர் நாசர்
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க சென்ற நிகழ்ச்சிக்கு ஆய்வுக்கு சென்ற பால்வளத்துறையமைச்சர் நாசர் தனக்கு நாற்காலி தரவில்லையென்று கட்சி தொண்டர் ஒருவரை மண்ணாங்கட்டியால் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ஓங்கி அடித்து அங்கிருந்து பிடித்து தள்ளி இருக்கிறார் அமைச்சர் நேரு . இந்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அடிகொடுக்கும் அமைச்சர் நேரு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து, சால்வை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உதயநிதி ஸ்டாலின் அருகே நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு நின்று இருந்தார்.
வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு சென்றார்கள். ஒரு தொண்டர் உதயநிதிக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார்.
பொது மேடையில் தொண்டனை தாக்கிய அமைச்சர் KNநேரு #DMKFails #KNNehru #TNmedia pic.twitter.com/aoO4FovdRe
— Arasiyal Atrocities (@ArasiyalAtro) January 27, 2023
அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை பிடித்து அங்கிருந்து தள்ளினார் , அப்போது அமைச்சரின் செயலை பார்த்து பதறிபோன உதயநிதி ஏண்ணே இப்படி.. வேண்டாம்ணே என்று கூறியுள்ளார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.