Chair எங்கடா : தொண்டர் மீது கல்லெறிந்து விரட்டிய அமைச்சர் நாசர் - வைரலாகும் வீடியோ

M K Stalin DMK
By Irumporai Jan 24, 2023 08:35 AM GMT
Report

முதலமைச்சர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் ஆய்வுக்காக சென்ற பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கட்சித் தொண்டர் மீது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வுக்கு சென்ற அமைச்சர் :

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மாலை வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மாலை இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆய்வு செய்தார்.

Chair எங்கடா : தொண்டர் மீது கல்லெறிந்து விரட்டிய அமைச்சர் நாசர் - வைரலாகும் வீடியோ | Minister Nasser Threw Stone Worker

கல் வீசிய அமைச்சர் :

அப்போது தனக்கு அமர நாற்காலி எடுத்து வருவதற்கு தாமதமானதால் கடுப்பாகிய அமைச்சர் தொண்டர் மீது மண் கட்டியை தூக்கி எறியக்கூடிய காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த கட்சி தொண்டரை வாடா போடா என ஒருமையில் பேசுவது போல் வீடியோ காட்சி அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி சார்பிலும் அமைச்சர் சார்பிலும் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை , மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி போலத்தான் எனது நிலை என முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறிய நிலையில் தற்போது பால்வளத்துறை அமைச்சரின் செயல் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.