திடீரென சாலையில் படுத்து அடியில் உத்து பார்த்த அமைச்சர் சாமு நாசர்!
திருமுல்லைவாயில் மெட்ரோ குடிநீர் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை தரையில் படுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
வீணாக சாலையில் சென்ற குடிநீர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவலடி மாநகராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் வால்வின் உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் குடிநீர் தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணானது.
சாலையில் படுத்த ஆய்வு செய்த அமைச்சர்
இந்த செய்தி அமைச்சர் நாசர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, திடீரென சாலையில் முட்டியிட்டு பார்த்த பின்னர் காலையில் படுத்து வால்வு உடைந்த பகுதியை பார்வையிட்டார்.
உடனே குடிநீர் வீணாவதைக் தடுக்க உடனடியாக ராட்சக வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.