"பிச்சைக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுதான்" - அமைச்சர் நாசர்
பிச்சைக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுதான் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி பகுதியில் மருத்துவ கல்லூரி சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஊரக சுகாதார மையம் திறப்பு விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று பேசினார்.
வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திறப்பு விழாவில் இது குறித்து பேசியிருக்கும் அமைச்சர் நாசர், பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் பிச்சைக்காரர்கள் தான் என கூறினார்.
பிச்சைக்காரர்கள் ஐயா அம்மா என்று சொல்லி காசு பணம் கேட்கின்றனர். அரசியல்வாதிகள் நாங்களோ அய்யா அம்மா என சொல்லி ஓட்டு பிச்சை கேட்கிறோம்.
அதனால் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான் என்று பேசினார்.