பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா

COVID-19 Tamil nadu
By Irumporai Jul 15, 2022 04:27 AM GMT
Report

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 10 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா | Minister Nasar Affected By Corona Virus

அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

அமைச்சர் நாசருக்கு கொரோனா

இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா | Minister Nasar Affected By Corona Virus

இதுகுறித்து அமைச்சர் நாசர், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொர்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.