அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி
Government of Tamil Nadu
By Thahir
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் சென்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.