புத்தக திருவிழாவில் பயங்கரமாக சாமியாடிய மாணவிகள் - அமைச்சர் மூர்த்தி விளக்கம்
புத்தக திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
சாமியாடிய மாணவிகள்
மதுரை, தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இதில் அரசு மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது, 'அங்கே இடி முழங்குது' என்ற கருப்பசாமி பாடல் ஒலிக்கப்பட்டது.
அமைச்சர் விளக்கம்
இதனால் மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் மூர்த்தி,
"புத்தக திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிபரப்பானது. இதில் மத சாயமோ, சாதி சாயமோ இல்லை. எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
புத்தக திருவிழாவில் நடந்தது முழுக்க முழுக்க கிராமிய கலை நிகழ்ச்சி மட்டுமே. மதுரை என்பது சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கக் கூடிய இடம்" எனத் தெரிவித்துள்ளார்.