கார் விபத்தில் பாகிஸ்தான் அமைச்சர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் உயிரிழந்தார்.
கார் விபத்தில் அமைச்சர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்து வருபவர் முப்தி அப்துல் ஷக்கூர். இவர் நேற்று முன்தினம் ( ஏப்ரல் 15) தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் என்ற இடத்துக்கு அருகே காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மற்றொரு கார் ஒன்று அமைச்சர் முப்தியின் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் முப்தி அப்துல் ஷக்கூர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அமைச்சரின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் விபத்தில் உயிரிழந்த முப்தி அப்துல் ஷக்கூர் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.