மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
கொரோனா தடுப்பு பணிகளை கண்கானிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மதுரையில் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, "மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமபுறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது. கிராம புறங்களில் வீடு வாரியாக பரிசோதனை மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது" என்றார்.
அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவருடன் இருந்தார்.