பால் தட்டுப்பாடு; லைசன்ஸ் கேன்சல் பண்ணிடுவேன் - விளாசிய அமைச்சர்!
பாலை கள்ளச் சந்தையில் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ்,
அமைச்சர் எச்சரிக்கை
"இன்று (டிச.7) காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் மூலமாக பால் அனுப்பப்பட்டு வருகிறது.
தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும்.…
— Mano Thangaraj (@Manothangaraj) December 7, 2023
தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்கவோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.