இதுக்கு பதில் சொல்லுங்க ஆளுநரே...ராமர் சிலையை மோடி தொடுவது சரியா..?அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி..!
வரும் 22-ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு மிகவும் பிரம்மாண்டமாக நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனோ தங்கராஜ் கேள்வி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டிருந்த பதிவில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், திராவிட கட்சிகளை சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜும் பதிவு ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
திசை திருப்பும் முயற்சி...
அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளுவர் யார், அவர் என்ன போதித்தார் என்பதை விட்டு விடுங்கள், அது உங்களுக்கு புரியாது தமிழ் நாட்டு மக்கள் அதை பார்த்து கொள்வார்கள்.
ஆளுநர் முதலில்,சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு தனது பதிலை கூறட்டும்.
திருவள்ளுவர் யார், அவர் என்ன போதித்தார் என்பதை விட்டு விடுங்கள், அது உங்களுக்கு புரியாது தமிழ் நாட்டு மக்கள் அதை பார்த்து கொள்வார்கள். ஆளுநர் முதலில்,சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு… pic.twitter.com/aj4jtL1BWm
— Mano Thangaraj (@Manothangaraj) January 16, 2024
இது மோடி/சங்கராசாரியார்கள்/ சனாதனம்-சர்சயை திசை திருப்பும் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும்.