Half Boil சாப்பிடாதீங்க: தமிழக மக்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை
பறவைக்காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.
பறவை காய்ச்சல்
சென்னையிலும் சென்னையை சுற்றியுள்ள பகுதியிலும் பறவை காய்ச்சல் பரவி பல (H5N1) காகங்கள் உயிரிழந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பறவை காய்ச்சல் காரணமாக கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவெடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் சில விடயங்களை பேசி உள்ளார்.
அவர் கூறியதன் படி “பறவைக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
இறந்த கோழியை எந்த வகையிலும் உண்ணக் கூடாது.” என அவர் மிக தெளிவாக கூறி உள்ளார்.

பறவை காய்ச்சலால் H5N1 எனப்படும் வைரஸ் விரைவாக பரவக்மூடியது என கூறப்படுகின்றது.
இதனால் குறிப்பாக காகம், கொக்கு, புறா, நாரை போன்ற பறவைகள் மூலம் பரப்பப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.