செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

DMK Ma. Subramanian
By Irumporai Jun 14, 2023 11:42 AM GMT
Report

செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை எனஅமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

 அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது,

செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பிற்றப்படவில்லை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி உள்ளனர்.

தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்துகிறது புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப்பெற்ற நிலையில் அமலாக்கத்துறை இதை கையில் எடுத்துள்ளது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தவர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்திலாவது வாக்கு வாங்கலாம் என எண்ணிய பாஜகவின் திட்டத்தை செந்தில் பாலாஜி தகர்த்ததால் கைது நடவடிக்கை. பதற்றத்தில் உள்ள பாஜக அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது.