செவிலியர்கள் எங்கே? அரசு நிழ்ச்சியில் கோபமாக வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென கோபமாக வெளியேறிய சம்பவத்தால் அதிகாரிகள் மிரண்டு போயின.
கோபமாக வெளியேறிய அமைச்சர்
தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் செவிலியர்களுக்கு காய்ச்சல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 1000 பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் மேடையில் அமர்ந்தார். பின்னர் 1000 பேர் கலந்து கொள்வார்கள் என்ற சொன்ன நிலையில் 50 பேர் கூட கலந்து கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கோபமாக வெளியேறினார்.
அதிகாரிகள் சமாதனாப்படுத்த முயன்ற நிலையில் அவர் அடுத்த முறை நிகழ்ச்சியை சரியாக ஒருங்கிணைத்தால் மட்டுமே கலந்து கொள்வேன் என்று காட்டமாக கூறிவிட்டு கிளம்பினார்.