நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் : ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர்

DMK Ma. Subramanian
By Irumporai Dec 20, 2022 10:13 AM GMT
Report

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார்.   

 நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் : ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் | Minister M Subramanian Gave Rs 1 Lakh

அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.  

ஒரு இலட்சம் நிதி

மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பினரும் பரந்த மனதுடன் நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் “நம்மஸ்கூல்பவுண்டேஷன்” திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார்.