அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதது ஒமைக்ரான் வைரஸ்.

இந்த நிலையில், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நபருக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளநிலையில் ,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகளை அடுத்து அமைச்சர் சாமிநாதன் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.