இறகுப்பந்து போட்டி - துவங்கி வைத்து உற்சாகமாக விளையாடிய அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்
சிவகங்கையில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் துவங்கி வைத்தார்.
[989LTL
சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் சார்பில் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்கும் மாநில தரவரிசை இறகுப்பந்து போட்டிகள் கடந்த 11ஆம் தேதி துவங்கியது. மாநிலம் முழுவதும் இருந்து இந்த போட்டியில் 1300 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். போட்டி காரைக்குடி ALS ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நடுவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று போட்டியை நடத்தி வருகின்றார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக மாநில தரவரிசை போட்டி இந்த ஆண்டு துவங்கியுள்ளது. இன்று இந்த போட்டியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பங்கேற்று துவக்கி வைத்தார். இறுதிப் போட்டிகள் வரும் 17ஆம் தேதி அன்று மாலை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் பரிசுகளும் சிவகங்கை மாவட்ட இறகு பந்து கழகத்தின் சார்பாக வழங்கப்பட உள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் தலைவர் இராமகிருஷ்ணன் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் மற்றும் மருத்துவர் ஜோதி கணேஷ் செயலாளர் பாரூக் உட்பட சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றார்கள்.