திமுக கூட்டணியில் ஓபிஎஸ் - போட்டுடைத்த அமைச்சர் கே.என்.நேரு
ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுகவில் ஓபிஎஸ்?
முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'நலன் காக்கும் ஸ்டாலின்' எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள மாவட்டங்களில்
அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர். அந்த வகையில் திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
அமைச்சர் சூசகம்
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு சில கட்சிகள் வருவதாக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த கூட்டணியில் இருந்துதான் திமுகவுக்கு ஆட்கள் வருகிறார்கள்.
ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து யாரும் அங்கு செல்ல மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் 2 முறை ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.