கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள்
காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த அமைச்சர்
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில், மேம்பட்ட மார்பக ஊடுகதிர் படச் சோதனை இயந்திரம்,
டிஜிட்டல் ஃப்ளுரோஸ்கோபி இயந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ,டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் இயந்திரம் என ரூபாய் 3.70கோடி மதிப்பிலான நான்கு அதிநவீன கதிரியக்க இயந்திரங்களை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்கான மருத்துவ சேவைக்கு தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை 1 மி.மீ அளவிலேயே கண்டறியும் நவீன கருவி இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
காவேரியில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது.
மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என கூறினார்.