அமைச்சர் சேகர் பாபுவை பார்த்து பொறாமைப்படும் அமைச்சர் KKSSR ராமசந்திரன்..!
''இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு .முற்காலத்தில் தன்னிடம் வேலை கேட்டு வந்ததாகவும் , தற்போது அவரைப் பார்க்கும் பொது பொறாமையாக இருக்கிறது '' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் .ராமச்சந்திரன் நகைச்சுவையாக கூறினார்.
பொதுக்கூட்டத்தில் கல கல
சென்னை மண்ணடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் பங்கேற்று பேசிய பொது அமைச்சர் சேகர் பாபு தன்னிடம் வந்து எதாவது வேலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டதாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக கூறினார் .
நான் அன்றைக்கு உங்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருந்தால் இன்று நீங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக ,மாவட்ட செயலாளராக ,அமைச்சராக இருந்து பணியாற்ற முடியாது எனவும் , அவரைப் பார்த்து எனக்கு தற்போது பொறாமையாக இருக்கிறது என்றும் எனக்கும் சேகர் பாவுக்கும் உங்களைவிட அதிமுகவை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் .
நாங்கள் இரண்டு பெரும் அந்த கட்சியை பற்றி தெரிந்தவர்கள் என நகைச்சுவையாக கூரியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது .