பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

Tamil nadu TN Assembly
By Karthikraja Aug 25, 2026 01:34 PM GMT
Report

minister keerthana about acquisition land for parandur airport: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.

பரந்தூரில் மாற்று திட்டம்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். 

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | Minister Keerthana About Parandur Acquisition Land

இதனால் சென்னையின் தொழில் வாய்ப்புகள் பறிபோகும், ஏற்கனவே 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என அரசின் இந்த முடிவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இன்றைய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இது குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் காரசாரமாக விதித்துள்ளனர். 

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | Minister Keerthana About Parandur Acquisition Land

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என அதிமுக எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. 

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | Minister Keerthana About Parandur Acquisition Land

பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும். 

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | Minister Keerthana About Parandur Acquisition Land

இதனிடையே பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், ஒரு திட்டதிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. அல்லது நிலத்தை மக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இதில் அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். 

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று திட்டம் - அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | Minister Keerthana About Parandur Acquisition Land

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, "ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம், அந்த திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்துள்ளார்.