கச்சத்தீவு விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Jaishankar Tamil nadu India
By Jiyath Apr 01, 2024 05:49 AM GMT
Report

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். 

கச்சத்தீவு விவகாரம் 

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, 1974ம் ஆண்டு இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கச்சத்தீவு விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்! | Minister Jaishankar About Kachchatheevu Issue

கச்சத்தீவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அந்த ஆவணங்களை வெளியிட்டுள்ள அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக தான் முக்கிய காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் "நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இலங்கைக்குத் கச்சத்தீவை வழங்க விரும்பினார்.

5 பன்னீர் செல்வங்கள் தேடித்தேடி கண்டுபிடிப்பு - சதி வேலை செய்தது யார்?

5 பன்னீர் செல்வங்கள் தேடித்தேடி கண்டுபிடிப்பு - சதி வேலை செய்தது யார்?

கடித பரிமாற்றம்

கச்சத்தீவு தொடர்பான பல தசாப்தங்களாக நிலவி வரும் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான உரிமைகள் பிரச்னை, திடீரென உருவாகவில்லை. அது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது.

கச்சத்தீவு விவகாரம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்! | Minister Jaishankar About Kachchatheevu Issue

மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்னை குறித்து பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், இதே பிரச்னை குறித்துக் கேட்டிருக்கிறார். இதுவரை தமிழக முதல்வர்களுக்கு 21 முறை இது தொடர்பாகப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன. இன்றைய மத்திய அரசு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய சூழலிலிருந்தாலும், இது இப்போதுதான் நடந்தது என்பது போல இரு கட்சிகளும் செயல்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்