அமைச்சர் மெய்யநாதனுக்கு உடல்நலக் குறைவு - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Government of Tamil Nadu
By Thahir
அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வருபவர் மெய்யநாதன். இவர் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென இவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கடுமையாக பாதிகப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் நள்ளிரவு 2 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அங்கிருந்து கடலுார் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் உடல் நலம் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.