முறைகேடு வழக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை
DMK
By Thahir
முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை
2008 வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வாரியத்தின் மனையை ஒதுக்கியதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு வீட்டு மனை ஒதுக்கியத்தில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டது.
2012-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் ஐ.பெரியசாமி.
இந்த நிலையில், வீட்டுமனை முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.