சிக்ஸர் அடித்து வாக்கு சேகரித்த அமைச்சர் யார் தெரியுமா?
ராயபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் , மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார், சென்னை ராயபுரம் பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்.

திமுக ஆட்சி காலத்தில் அனைத்தையும் ராயபுரம் தொகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் கூறினார். மேலும், மக்கள் தன்னை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்வார்கள் என உறுதிப்பட கூறினார்.
அதேசமயம் , ஜனநாயகத்தின் மீது தான் அதிமுகவிற்கு நம்பிக்கையே தவிர பண நாயகத்தின் மீது அல்ல என கூறிய அவர், திருவெற்றியூர் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் இருப்பதாகவும், விசாரணைக்கு பின் முடிவு தெரியவரும் என கூறினார்.