ஜட்கா இறைச்சி மட்டும் சாப்பிடுங்க; அமைச்சர் அறிவுரை - அது என்னென்னு தெரியுமா?
ஜட்கா இறைச்சியை மட்டுமே சாப்பிட இந்துக்களுக்கு அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார்.
ஜட்கா இறைச்சி
பிகார் அரசு காளி கோயிலில் விலங்குகளை பலியிடக்கூடாது என்று தடை விதித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் என எழுந்து வருகிறது. இந்நிலையில், பெகுசாராய் எம்பியும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கிரிராஜ் சிங்,
விலங்குகளை நேசிப்பதாக கூறும் சிலர், இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடக்கூடாது என்று அவர்கள் குரல் எழுப்பாதது ஏன்?
அமைச்சர் அறிவுரை
முஸ்லிம்கள் மத வழக்கத்தின்படி ஹலால் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதேபோல இந்துக்களும், ஜட்கா இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும். உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. இதில் இந்து மதத்தைவிட சிறந்த மதம் கிடையாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்து கோயில்களில் பலி கொடுக்கும்போது ஒரே வெட்டில் விலங்கை கொன்றுவிட வேண்டும். ஓங்கி வெட்டும்போது தண்டுவடம் அறுபடும் வகையில் பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடியாக மரணம் ஏற்படும். இந்த முறைக்கு ஜட்கா என்று பெயர். பஞ்சாபில் பெரும்பாலான இறைச்சி கடைகளில் ஜட்கா இறைச்சி மட்டுமே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.