சொத்து குவிப்பு வழக்கு; அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை - நீதிமன்றம் அதிரடி
சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம்.
அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந் கீதா ஜீவனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரர் ஜெகன் உள்ளிட்ட 5 பேர் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தற்போது இந்த வழக்கில் இருந்து கீதா ஜீவன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.