கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சி.வெ.கணேசன்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை அமைச்சர் சி.வெ. கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் உருமாறிய இரண்டாம் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய கடைகளும் மதியம் 12 மணிவரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று மே.10-ம் தேதி முதல் மே. 24-ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாலர்கள் சந்திப்பில் பேசியது, ”ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது அரசு மருத்துவமனையில் 40 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அளவு மருந்து மாத்திரைகள் உள்ளது மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளது.
மருத்துவர்கள் தேவை உள்ளதாகவும் அதில் ஐந்தாவது தற்போது ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் இடத்தில் தலைமை மருத்துவ அதிகாரி எழில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுத்து மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க போவதாக உறுதி அளித்து செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் முகக்கவசம் கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார்.