4 தலைவர்களின் மொத்த உருவமாக உதயநிதி ஸ்டாலினை பார்க்கிறேன் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

Udhayanidhi Stalin Annadurai M Karunanidhi Periyar E. V. Ramasamy E. V. Velu
By Karthikraja Nov 28, 2024 09:44 PM GMT
Report

பெரியாரிடம் இருந்த பகுத்தறிவும், சுயமரியாதையும் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளதாக அமைச்சர் எவவேலு பேசியுள்ளார்.

எ.வ.வேலு

சென்னை பாரிமுனை - ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக இளைஞரணி சார்பில் 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

ev velu about udhayanidhi

இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 4 பேருக்கு அடுத்ததாக ஐந்தாவது தலைமுறையாக உதயநிதி பணியாற்றி வருகிறார்.

ev velu about udhayanidhi

முதல்வர் ஸ்டாலினுடன் எனக்கு 26 ஆண்டுகள் பழக்கம். உதயநிதி ஸ்டாலினை சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். பெரியாரிடம் இருந்த பகுத்தறிவும், சுயமரியாதையும் இவரிடம் உள்ளது.

அண்ணாவிடம் இருந்த சரளமாக ஆங்கிலம் பேசும் திறன், தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினிடம்தான் உண்டு. இந்த 4 தலைவர்களின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளிப்பவர் உதயநிதி ஸ்டாலினின் என்று சொன்னால் அது மிகையாகாது" என பேசினார்.