5 நாள் ரெய்டு; 1 பைசா கூட பறிமுதல் செய்யல, எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல - எ.வ வேலு
ஒரு பைசா கூட என்னிடம் இருந்து பறிமுதல் செய்யவில்லை என எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
எ.வ வேலு
தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன.
இந்நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் 5 நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. தொடர்ந்து, அவருடைய அருணை பொறியியல் கல்லூரி தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ வேலு, 2 நாட்களாக காசா கிராண்டில் 100 கோடி புடித்துவிட்டார்கள், அப்பாசாமி நிறுவனத்தில் 100 கோடி புடித்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதனால் தான் இன்று அழுத்தமாக சொல்கிறேன். 100 சதவீதம் அந்த 2 கம்பெனிகளுக்கும் எனக்கும் என் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என் வீட்டிலோ அல்லது என் மனைவி வீட்டிலோ அல்லது என்னுடைய 2 பிள்ளைகள் வீட்டிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ வீட்டிலோ அவர்கள் ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தால் கூட நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவரவர்கள் தொழில் செய்கிறார்கள்.
அவர்கள் அங்கு கணக்கை சரியாக காட்டவில்லை என்பதற்காக, ரெய்டு போன இடங்களில் பணம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனவே வெளியில் பரவி வரும் அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்துள்ளார்.