காண்டிராக்டரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு - பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த அமைச்சர்

karnataka ministereshwarappaquit
By Petchi Avudaiappan Apr 14, 2022 09:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

காண்டிராக்டரை  தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் வழக்கில்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கே.பாட்டீல் என்ற காண்டிராக்டர் மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும்  தனது சாவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனால் அமைச்சர் ஈஸ்வரப்பாவை உடனடியாக  உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதனால் ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகமாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், முதலமைச்சர்  பசவராஜ் பொம்மையை இன்றுசந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாகவும் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.