பள்ளி விழாவில் பவர் கட்… அப்செட் ஆன அமைச்சர் துரைமுருகன்

Government of Tamil Nadu Durai Murugan
By Thahir Sep 13, 2022 01:55 PM GMT
Report

அமைச்சர் துரைமுருகன் பள்ளி விழாவில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென் மின் தடை ஏற்பட்டதால் அப்செட் ஆன துரைமுருகன் இருக்கையில் சோகத்துடன் சென்று அமர்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்செட் ஆன அமைச்சர் 

வேலுார் மாவட்டம் காட்பாடியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேடையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால் மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம்துண்டிக்கப்பட்டதால் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நின்று கொண்டிருந்த அவர், மின் இணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

பள்ளி விழாவில் பவர் கட்… அப்செட் ஆன அமைச்சர் துரைமுருகன் | Minister Duraimurugan Upset About Power Cut

பின்னர் அப்செட்டில் மாணவர்களுக்கு அவசர அவசரமாக மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார், கருணாநிதி ஆகிய இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.