அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - விரைந்த முதலமைச்சர்!
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன்(86). திமுக பொதுச்செயலாளரும், கனிமளவத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இவருக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது திடீரென துரைமுருகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து பரிசோதித்ததில் லேசான உடல் சோர்வுடன், சளி தொடர்பான பிரச்சனை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பின் மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தனர். தற்போது சிகிச்சைக்கு பிறகு நாளை வீடு திருப்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.