என்ன பவரே இல்லை என்ன பண்றீங்க ? திமுக கூட்டத்தில்பொறியாளரை கடிந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன்

DMK Durai Murugan
By Irumporai Apr 05, 2023 04:10 AM GMT
Report

திமுக கூட்டத்தில் பாதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அமைச்சர் துரைமுருகன் கடிந்து கொண்டார்.

திமுக கூட்டம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க திமுக முனைந்துள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருந்தார்.

என்ன பவரே இல்லை என்ன பண்றீங்க ? திமுக கூட்டத்தில்பொறியாளரை கடிந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் | Minister Duraimurugan Electric Engineer Power Off

இதனை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழா ஊட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், மா,சுப்பிரமணியன், ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது விழா மேடையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் இயக்க தாமதமானது 

கோபமான துரைமுருகன்

இதனால், அமைச்சர் துரைமுருகன் உடனடியாக, அங்குள்ள மின்பொறியாளருக்கு போன் செய்து , இங்கு 3 அமைச்சர்கள் விழாவில் இருக்கிறோம். இரண்டு முறை மின்சாரம் தடைபட்டு விட்டது. என கேட்டுள்ளார். அதற்கு அந்த மின் பொறியாளர் , எங்கு மின் தடை என கேட்டதாக தெரிகிறது. உடனே, தன்னை நேரில் வந்து பார்க்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறிவிட்டு போனை கொடுத்துவிட்டார் இந்த சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.