அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோவில் அனுமதி!

Tamil nadu DMK Durai Murugan
By Sumathi Jan 14, 2023 08:25 AM GMT
Report

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு

தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோவில் அனுமதி! | Minister Duraimurugan Admitted To Chennai Apollo

தொடர்ந்து, அண்மையில் காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.