உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் நேரில் சந்திப்பு..!
CM
Hospital
Minister
MKStalin
Duraimurugan
Meet
Admit
By Thahir
காய்ச்சல் காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது அவரை உள் நோயாளியாக மருத்துவர்கள் அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் தற்போதைய நிலை குறித்து,
முழு தகவல் மருத்துவமனை தரப்பில் அறிக்கையாக வெளியிடப்படும்.
அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை வீடு திரும்புவார் என்று எதிர்பாரக்கப்படுகிறது.