மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் - துரைமுருகன் பேச்சு!

Tamil nadu DMK Durai Murugan Vellore Lok Sabha Election 2024
By Jiyath Apr 09, 2024 06:45 AM GMT
Report

மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் 

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் டி.எம்.கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வேலூர் மாவட்டம் பிச்சனூர் தேரடி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் - துரைமுருகன் பேச்சு! | Minister Duraimurugan About Mk Stalin

இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம்.

ஆட்சி மாற்றம் 

பிரதமர் மோடி வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அலை வீசுகிறது. வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது.

மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் - துரைமுருகன் பேச்சு! | Minister Duraimurugan About Mk Stalin

நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாஜக தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வேட்டி கட்டியவர் கைகாட்டும் நபர்தான் பிரதமராக வந்து கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்.