மாரடைப்பால் அமைச்சர் திடீர் மரணம் - முதலமைச்சர் இரங்கல்
கர்நாடக மாநில நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் இன்று காலமானார் அவருக்கு வயது 61.
அமைச்சர் திடீர் மரணம்
அமைச்சர் உமேஷ் கட்டி நேற்று இரவு தன் வீட்டில் உணவு அருந்திவிட்டு குளியலறைக்குச் சென்றுள்ளார் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

அப்போது அமைச்சர் உமேஷ் கட்டி மயங்கி கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் நேரில் அஞ்சலி
அமைச்சரின் மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அவரின் மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..