காலம் எவ்ளோ வேகமா சுற்றுது பாத்திங்களா : சூரியவம்சம் பாணியில் பிளாஷ்பேக் போன அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார். கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் நடனமாடிதிருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், :
எவ்வளவு தூரம் சென்றாலும், நமது வேர்களை மட்டும் மனம் நினைக்க மறக்காது. எனது உறவுகளான ஊர் மக்களுடன் இணைந்து நடனம் ஆடியது, என்னை என் இளமைக்கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
எவ்வளவு தூரம் சென்றாலும், நமது வேர்களை மட்டும் மனம் நினைக்க மறக்காது. எனது உறவுகளான ஊர் மக்களுடன் இணைந்து நடனம் ஆடியது, என்னை என் இளமைக்கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
— R.SAKKARAPANI (@r_sakkarapani) June 2, 2022
மக்கள் பணியில் ஆழ்ந்திருக்கையில், காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது என்பதே தெரிவதில்லை. pic.twitter.com/TfjdciQOp6
மக்கள் பணியில் ஆழ்ந்திருக்கையில், காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது என்பதே தெரிவதில்லை ,என பதிவிட்டுள்ளார்.