இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நண்பகல் 12 மணியளவில் தொடங்கவுள்ள இக்கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இதில் சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.
மேலும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
