இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

M K Stalin DMK
By Fathima Feb 05, 2026 03:07 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் | Minister Assembly In Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகத்தில், நண்பகல் 12 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

அதில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தெரிகிறது.

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? முதல்வர் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? முதல்வர் ஸ்டாலின்


மேலும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதிய திட்டங்கள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.   

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் | Minister Assembly In Tamil Nadu