தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

Flu Tamil nadu
By Karthikraja Aug 27, 2026 06:02 AM GMT
Report

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்

இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | Minister Arunraj Says Swine Flu Control In Tn

டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி எழுப்பினார். 

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | Minister Arunraj Says Swine Flu Control In Tn

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், "பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மே மாதத்துக்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது. 

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | Minister Arunraj Says Swine Flu Control In Tn

தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.