எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை? - அமைச்சர் தகவல்

Minister ma subramanian Medical admission
By Petchi Avudaiappan Jun 10, 2021 12:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 நடப்பு கல்வியாண்டில் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்த தகவலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அரசிடம் தற்போது போதிய மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், மருந்து விநியோகம் திருப்திகரமாக இருப்பதாகவும், கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று கூறும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசி அறிவித்தால் உடனடியாக வரவேற்பதாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி அரசு அறிவிக்கும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடத்துக்கு செலவு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முறைகேட்டில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.