தமிழ்நாடு கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை.... அமைச்சர் ரமேஷ்

Tamil nadu
By Manchu Jun 07, 2026 06:15 PM GMT
Report

வழிபாட்டு தளங்களில் லஞ்சத்தை தடுப்பதற்கு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

வழிபாட்டு தளங்கள்

தமிழகத்தில் உள்ள பல வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல ஆயிரங்கள் லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு லஞ்சம் வாங்குவதற்காகவே கோவில்களில் சில அர்ச்சகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தவெக கட்சி பதவிக்கு வந்த பின்பு பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.

திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? பரபரப்பை கிளப்பிய ராகவா லாரன்ஸின் அறிவிப்பு

திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? பரபரப்பை கிளப்பிய ராகவா லாரன்ஸின் அறிவிப்பு

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டு நிலையில், பல கோவில்களுக்கு திடீர் விசிட் அடித்து அதிர்ச்சி கொடுக்கின்றார்.

சமீபத்தில் திருச்செந்தூருக்கு முகக்கவசம் அணிந்து சென்ற அமைச்சர் ரமேஷிடமே லஞ்சம் பெற்ற விவகாரம் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை.... அமைச்சர் ரமேஷ் | Minister Announce Online Ticket For All Temple

கடுமையான திட்டம்

இம்மாதிரியான முறைகேடுகள் தமிழ்நாட்டில் இனி நடைபெறாமல் இருப்பதற்கு டிஜிட்டல் முறையை கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் மற்றும் கணினி மூலம் தாங்கள் கோவிலுக்கு செல்லும் தேதி ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதன் மூலமாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து லஞ்சம் வாங்வது முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை.... அமைச்சர் ரமேஷ் | Minister Announce Online Ticket For All Temple

முதற்கட்டமாக திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் மற்றும் திருவண்ணாமலை போன்ற கோயில்களில், கார்த்திகை தீபம், சூரசம்ஹாரம் போன்ற பெருவிழாக் காலங்களில் இந்த நடைமுறை கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு விரைவில் செயல்முறைக்கு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.