இனி ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான் ... மாணவர்களுக்கு எச்சரிக்கை
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஆசிரியர்கள் மீது மன ரீதியான அல்லது உடல் ரீதியான தாக்குதல்களை மாணவர்கள் நிகழ்த்தும் சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலாகி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது குறைவதாக இல்லை.
நமது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ள தாய், தந்தைக்கு அடுத்து, தெய்வத்திற்கு ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கவலையளிப்பதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் அடுத்த தலைமுறை மிகப் பெரிய ஆபத்தை நோக்கி செல்கிறது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுபோன்ற சட்டசபையயில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். அப்போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாக தொந்தரவு தந்தால் மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.