தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் கல்வி பயின்று வந்த மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேசமயம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விடைத்தாள் திருத்தும்பணி , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் போன்றவை காரணமாக ஜூன் மாதம் இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் திட்டமிட்டபடி 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)