பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி

DMK Anbil Mahesh Poyyamozhi
By Irumporai Sep 28, 2022 05:38 AM GMT
Report

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1 என்1 வகை  இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சல் உள்ளதாக , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டதில் , அவருக்கு எச்1 என்1 வகை  இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி | Minister Anbil Mahesh Admitted Hospital

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.