அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ? : வெளியான அதிர்ச்சி தகவல்

DMK Anbil Mahesh Poyyamozhi
By Irumporai 2 மாதங்கள் முன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வருகின்றது, குறிப்பாக இன்ஃபுளுயன்சா காய்ச்சால் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளை தாக்கி வருவதால் குழந்தைகள் மருத்துவ மனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ? : வெளியான அதிர்ச்சி தகவல் | Minister Anbil Mahesh Admitted

இதனையடுத்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக அன்பில் மகேஷ் பொய்யா மொழி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ? : வெளியான அதிர்ச்சி தகவல் | Minister Anbil Mahesh Admitted

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பபட்ட நிலையில் அமைச்சருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி என கூறப்படுகிறது , இந்த தகவல் தமிழக அரசியல் மற்றும் திமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.