தேர்தல் போலவே பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

dmk anbilmagesh publicexam
By Irumporai Apr 04, 2022 07:08 AM GMT
Report

இனி பள்ளி தேர்வுகள் எல்லாம் தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பான ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தேர்வுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களில் ஏற்கனவே 10 ஆயிரம் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டிடங்களும் இடிக்கப்படும் அந்த பள்ளி வளாகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள வாடகை கட்டடங்களில் அவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இரண்டாவது முறையாக வெளியாக இருக்க கூடிய நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீட் தேர்வுக்கு தயாராக அரப்பள்ளி மாணவர்களுக்கு Hi Tech lab வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இனி பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறினார்.