ரோட்டரி சங்கம் சார்பில் 500 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி - மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய அமைச்சர்!
minister
provide
anbil magesh
pulse oxymeter
By Anupriyamkumaresan
திருச்சியில் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 500 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கோட்டை ரோட்டர் சங்கம் சார்பில், 500 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் வழங்கினர்.
இதனை கொரோனா நோய் தடுப்பு மருத்துவ பணியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஒப்படைத்தார். மேலும் இ.ஆர்.மேல்நிலை பள்ளியில் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் ப்ளோ மீட்டர்களை திருச்சி தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.